சென்னை

மிழக அரசின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன சோப்பு. ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களை நோதனை செய்ய உள்ளது.

 

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான சோப், பவுடர், ஷாம்பு உள்ளிட்ட பல அழகு சாதனங்களை பல வருடங்களாக தயாரித்துவிற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களில் பல சர்வதேச அளவில் பல நாடுகளில் சோதனை செய்யப்பட்டன. அந்த சோதனையில் இந்த பொருட்கள் தேர்ச்சி பெறாததால் தடை செய்யப்பட்டன.

கடந்த மாதம் இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு சோதனைச் சாலை பல சோதனைகளை நிகழ்த்தியது. அந்த சோதனையில் இந்த நிறுவன ஷாம்பூரில் ஃபார்மல்டிஹைட் என்னும் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த ரசாயனம் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும். தனது ஆய்வறிக்கையை இந்த சோதனைச்சாலை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பியது.

தேசிய ஆணையம் ஆந்திரா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தது. அப்போது அதில் ஒரு சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது. அதை ஒட்டி அனைத்து மாநிலங்களும் இந்த நிறுவனத்தின் குழந்தைகள் பொருட்களை உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் பராமரிப்பு ஆணையம் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பொருட்களின் மாதிரியை சேகரித்துள்ளது. இந்த பொருட்களை விரைவில் ஆய்வு செய்ய உள்ளது. தேசிய ஆணையத்தின் பரிந்துரைக்கேற்ப இந்த சோதனையில் பொருட்கள் தேர்ச்சி பெற்றாலும் அடிக்கடி சோதனை இட திட்டமிடப்பட்டுள்ளது.