தமிழகத்தில் இன்று புதியதாக 1,366 பேருக்கு கொரோனா: 23வது நாளாக குறைந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 23வது நாளாக இன்று 2 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் புதியதாக 1,366 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 7.88 லட்சமாக அதிகரித்துள்ளது. இன்னமும், 10,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதியதாக 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். கொரோனா தொற்றிலிருந்து புதியதாக 1,407 பேர் குணம் பெற்று உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.