சென்னை:

கால்நடை மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்யலாம்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பம் செய்ய தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதுபோல கவுன்சிலிங்கும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.

இந்நிலையில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புக்கும் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதற்கான விண்ணப்பம் இன்று முதல்  ஜூன் 6 மாலை 6 மணி வரை கால்நடைத்துறைக்கான இணைய தளத்தில்  விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி:  http://www.tanuvas.ac.in 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஜூன் 11 மாலை 5.45 மணிக்குள் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில்தான் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.