ரஞ்சிக் கோப்பை – தமிழகம் vs மும்பை லீக் போட்டி டிரா!

சென்னை: தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை லீக் போட்டி டிராவில் முடிவடைந்தது.

சென்னையில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் மும்பைக்கு 3 புள்ளிகளும், தமிழகத்திற்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டன.

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்களை அடித்தது. பின்னர் பதிலுக்கு ஆடிய தமிழக அணியின் முதல் இன்னிங்ஸ் 324 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. தமிழக அணியின் அஸ்வின் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால், முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 164 ரன்கள் பின்தங்கியதால் ஃபாலோ ஆன் பெற்றது தமிழக அணி. இதனால், மீண்டும் பேட்டிங் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து ஆடியபோது போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், முதல் இன்னிங்ஸ் ரன்கள் அடிப்படையில் மும்பைக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டன.

கார்ட்டூன் கேலரி