ரஞ்சிக்கோப்பை – ரயில்வேஸ் அணிக்கு எதிராக மாஸ் வெற்றிபெற்ற தமிழகம்!

சென்னை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரயில்வேஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி.

இப்போட்டி சென்னையில் நடைபெற்றது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரயில்வேஸ் அணி எடுத்தது வெறும் 76 ரன்களே. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி மொத்தமாக 330 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திரஜித் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரயில்வேஸ் அணி சார்பில் ஹார்ஷ் தியாகி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ரயில்வேஸ் அணி எடுத்தது வெறும் 90 ரன்கள் மட்டுமே. தமிழக அணி சார்பில் சாய் கிஷோருக்கு 3 விக்கெட்டுகளும், அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகளும் கிடைத்தன.

நடராஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றிக்காக தமிழக அணி பெற்ற புள்ளிகள் 7.