சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குழு நேற்று இரவு சென்னைக்கு வந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
a
இடையில் லண்டனில் இருந்து மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வந்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று 14-வது நாளாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக்குழு அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை நேற்றும் மேற்கொண்டது.
இந்த நிலையில், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் குழு,  நேற்று மாலை 5 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு  சென்னை வந்தது.
பிறகு இரவு அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் ஆலோசித்தது.   ஜெயலலிதாவின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை முதல் எய்ம்ஸ் மருத்துவர் குழு சிகிச்சையை துவங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.