இன்று இரவு தாயகம் திரும்புகிறார் சசிகலா புஷ்பா: நாளை கோர்ட்டில் ஆஜர்

மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா  நாளை ஆஜராக  நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார் சசிகலா புஷ்பா. நீதிமன்ற உத்தரவை அடுத்து, இன்று இரவு பன்னிரண்டு மணி விமானத்தில் தாயகம் திரும்புகிறார்.

திரும்பியவுடன் விமான நிலையத்திலேயே செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தெரிகிறது. அப்போது, அதிமுக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா மீது புது புகார்களை தெரிவிப்பார் என்று தெரிகிறது.

0

அதே நேரம், நாளை கோர்ட்டில் ஆஜராகும் சசிகலா புஷ்பா மீது புதிய வழக்கு தொடுக்கப்படலாம் என்றும் ஒரு  தகவல் உலவுகிறது.

மொத்தத்தில், கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த சசிகலா புஷ்பா விவகாரம், நாளை முதல் மீண்டும் தலை தூக்கப்போகிறது.