டெல்லி:

கில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்தியஅரசு  ஒதுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக்கல்விக்கான இடங்களில் நீட் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் இடஒதுக்கீடு முறை சரியாக பின்படவில்லை. இதனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக மாறி வருகிறது.

‘இடஒதுக்கீட்டின், இளங்கலை மருத்துவ படிப்புக்காக மாநில தொகுப்பிலிருந்து 15% இடமானது மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும். அதே போல மருத்துவ மேல் படிப்புக்கு 50% இடங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படக்கூடிய இடங்களில் ஓபிசி, பிசி, எம்.பி.சி (OBC, BC, MBC ) பிரிவினருக்கான இடஒதுக்கீடானது அமல்படுத்த வேண்டும். அதுபோல, ஓபிசி (OBC) பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் இருந்து 27% இடத்தை ஒதுக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை.

இதன் காரணமாக, இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தும் வகையில், அகில இந்திய மருத்துவ தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக, பாமக உள்படபல்வேறு அரசியல்கட்சிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இப்போது மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  மனுவில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்புக்காக வழங்க கூடிய இடங்களில் 50% இடத்தை ஓபிஎசி, பிசி மற்றும் ( OBC, BC, MBC) எம்.பி.சி பிரிவினருக்கு வழங்க வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் தமிழக அரசிடம் இருக்கக்கூடிய தொகுப்பிலான இடங்களில் இடஒதுக்கீடு முறையானது முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

ஒவ்வொரு மாநிலமும், இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. எனவே தமிழக அரசு மத்திய தொகுப்புக்கு அனுப்பக்கூடிய இடங்களில் 50% இடத்தை OBC, BC மற்றும் MBC உள்ளிட்டோருக்கு ஒதுக்க  உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.