டிகர் தனுஷ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள காலா திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மிரட்டல் விடுத்துள்ளர்.

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’.  இந்த படத்தை நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் 7ந்தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன்  ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானா படேகர், ஹியூமா குரேஷி போன்ற நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  சினிமா தயாரிப்பாளர்களுக்கு  சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும், இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், காலா படம் ரிலீசாகும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகும் என அறிவித்துள்ளது.

இது  தமிழ் திரைப்பட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.