‘கஜா’ நிவாரணத்துக்காக அமெரிக்காவில் மொய் விருந்து நடத்திய தமிழர்கள்

வாஷிங்டன்:

மிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ள கஜா புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அங்கு மொய் விருந்து நடத்தி நிதி சேகரித்தனர். இந்தவிருந்து நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு உதவி செய்தனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற மொய் விருந்து

கடந்த 16ந்தேதி அதிகாலை வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயலுக்கு நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.

புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 14 நாட்களாக அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முழுவதுமாக சீரமைக்க மேலும் பல நாட்கள் ஆகும் என எதிர்பார்ககப்படுகிறது.

இந்த நிலை வெளிநாடு வாழ் தமிழர்கள் கஜா நிவாரண பணிகளுக்கு தங்களால் முடிந்த உதவி களை செய்து வருகின்றனர். ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஏராளமான நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் பணி நிமித்தமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் வாஷிங்டனில் ,  கஜா நிவாரண நிதிக்காக மொய்விருந்து நடத்தினர்.

வாஷிங்டனில் நடைபெற்ற மொய் விருந்து

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருக்கும் ‘ஏம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ’டைன் ஃபார் கஜா’ என்ற பெயரில் உணவு விற்பனை செய்து நிதி திரட்ட விரும்பு வதாக அறிவித்திருந்தனர். இந்த விருந்து அங்குள்ள சென்னை எக்ஸ்பிரஸ் உணவகம் இலவசமாக உணவு வழங்கி தனது பங்கை செலுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டு தாராளமாக நன்கொடை வழங்கிச் சென்றுள்ளனர். வசூலாகும் நிதியை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.