ஸ்டெர்லைட் உரிமையாளர் லண்டன் வீடு முன் தமிழர்கள் போராட்டம்

லண்டனில் உள்ள அனில் அகர்வால் வீடு முன்பு போராட்டம்

லண்டன்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 25க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் 12 பேர் மட்டுமே பலியானதாக அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதம் காரணமாக, வேதாந்த குழும தலைவரும், ஸ்டெர்லைட்  தாமிர உருக்கு ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் லண்டன் வீடு முன்பு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் இங்குதான் இருக்கிறார், என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.