சிஏஏ சட்டத்துக்கு எதிராக தமீமும் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ்! சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுமா?

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, தமீமும் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் துணை முதல்வர் ஓபிஎஸ் 2020-21ம் ஆண்டுக்கான நிதி அறிக்கை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை தினம். அதையடுத்து, இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

இன்னும்  4 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெயிச்ச சுயேச்சை எம்எல்ஏ தமீமும் அன்சாரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்து உள்ளார்.

இந்த நோட்டீஸ் குறித்து இந்த தொடரில் விவாதிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது…

இதற்கிடையில், சென்னை உள்பட தமிழகத்தில் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை கிளப்ப திமுக உள்பட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவை அமளிதுமளியாகும் வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டமன்றத்தைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.