தமிழ்நாடு : நாளை சட்டசபை கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது..

சென்னை

மிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் 10 நாட்கள் விடுமுறைக்குப் பின் நாளை மீண்டும் நடைபெறுகிறது.

கடந்த மே மாதம் 29 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக கூட்டம் தொடங்கியது.  அப்போது தகவல் தொழில் நுட்பம், பள்ளிக் கல்வி, உள்ளாட்சித் துறை, தேசிய நெடுஞ்சாலைகள், பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த  14 ஆம் தேதியன்று சட்டப்பேரவைக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.    அதை ஒட்டி நாளை சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் கூட உள்ளது.    நாளை செய்தி மற்றும் விளம்பரம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.    இந்த தீர்மானங்கள் மீது திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச உள்ளனர்.

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை  இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய அம்சமான காவல்துறை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.   விவாதங்கள் முடிந்த பின்பு  முதல்வர் பழனிச்சாமி விவாதங்களுக்கு பதில் அளிக்க உள்ளார்.   அதன் பிறகு முதல்வர் புதிய அறிவிப்புக்களை வெளியிடுவார்.

இந்தக் கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுளன.   அத்துடன் நாமக்கல்லில், திமுக தொண்டர்கள் கைது,  பசுமை வழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச உள்ளன.