சையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ரோஜா’ படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய ’தமிழா தமிழா நாளை நம் நாளே’’ என்று இந்திய உணர்வும், தமிழ்மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடல் என்றைக்கு கேட்டாலும் உணர்வுகளை தட்டி எழுப்பும்.
1992 ஆம் ஆண்டில் இப்பாடல் வெளி வந்த பிறகு மீண்டும் சுதந்திர தினத்தில் இன்று வெளியாகிறது. அதே பாடலைப் பல மொழிகளில் 65 முன்னணிப் பாடகர் கள் பாடியிருக்கிறார்கள். அபூர்வ இசைக் கலவையாக உருவாகியிருக்கிற இந்தப் பாடலின் முதல்வரியான ‘’ தமிழா தமிழா நாளை நம் நாளே’’ என்ற வரியை பாடக ரான எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டில் இப்பாடலைப் பாடிய ஹரிஹரன் மீண்டும் இந்தப் பாடலில் பாடி இணைந் திருப்பது சிறப்பு. யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் புதிய முயற்சி யாக ‘’டுகெதர் நெஸ் ஒன்’’ என்ற தலைப் பில் இன்று வெளியாகி உள்ள இசைத் தொகுப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் மோகன்லால், ராம் சரண், யாஷ் ஆகியோர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிப் பல தேசிய விருதுகளைப் பெற்றி ருக்கிற மூத்த பாடகரான எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடித் துவங்கியிருக்கும் இந்தப் பாடல் அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
கொரோனா தொற்றால் பாதித்து மருத்துவமனையில் கவலைகிடமாக சிகிச்சையிலிருந்தாலும் இன்று சுதந்திர நாளில் அவரின் குரல் தமிழா தமிழா என உலகெங்கும் ஒலிக்கிறது.
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் , சுஜாதா மோகன் , ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் அறங் காவலர்களாக பொறுபேர்கிறார்கள். இந்த ஊரடங்கு சமயத்தில் வாழ்வாதாரத்திற் காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவு வதே இந்த அமைப்பின் நோக்கம்.

பாடல் இணைப்பு லிங்க்:

bit.ly/TAOSongVideo