மின் தடை ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்கள் : மின் வாரியம் அறிவிப்பு

சென்னை

ருவமழை காரணமாக மின் தடை ஏற்பட்டால் அழைக்க வேண்டிய லாண்ட்லைன் மற்றும் மொபைல் எண்களை தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் எங்கும் தற்போது கனமழை பெய்து வருகிறது.  இந்த பருவமழை மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதையொட்டி தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த கன மழையால் மின் விநியோகம் பாதிப்பு அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதையொட்டி தமிழக மின் வாரியம் மின் தடை குறித்து புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்களை அறிவித்துள்து.

வழக்கமாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1912 மூலம் புகார் அளிக்கலாம்.  அத்துடன் 28524422 அல்லது 28521109 என்னும் லாண்ட் லைன் எண்ணுக்கு மின் தடை குறித்த புகார்கள் அளிக்கலாம்.   அது மட்டுமின்றி வாட்ஸ்அப்  என்ணான 9445850811 என்னும் எண் மூலமும்  புகார் அளிக்கலாம்.

கார்ட்டூன் கேலரி