சென்னை: மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது கடிதம் எழுதி உள்ளது.

இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டான்ஜென்கோ எழுதிய கடித விவரம் வருமாறு: மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்  நடைமுறை தென் சென்னை பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த மின்கம்பங்கள் பெரும்பாலும் கேபிள்களுக்காகவும், விளம்பர தட்டிகள் வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மின் கம்பங்களை சேதப்படுத்தும்.

ஊழியர்கள் பழுதுபார்க்கும் போது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அண்மைகாலங்களில் மாற்றப்பட்டு இருக்கின்றன.

தென் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

பழுதான மின்கம்பங்களை மாற்ற ஊழியர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அந்த பழுதுக்காக தேவையற்ற செலவு ஏற்படுகிறது. ஒரு மின்கம்பம் மாற்ற 7 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆண்டுதோறும் 10,000 கம்பங்கள் மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அதனால் அதிக பணமும் விரயாமாகிறது.

இது குறித்து சிட்லபாக்கம் குடியிருப்போர் சங்க நிர்வாகி விஸ்வநாதன் கூறுகையில், சிட்லபாக்கம் பஞ்சாயத்து தரப்பில் மின்கம்பங்களை பராமரிக்கிறது. நாங்களே மின்விளக்குக்கான பொத்தானை சரி செய்து கொள்கிறோம் என்றார்.