கண் பார்வையற்ற மாணவிக்காக தேர்வு எழுதிய நடிகர்!

கண் பார்வையற்ற மாணவிக்காக தேர்வெழுதிய தெலுங்கு நடிகர் தனீஷூக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

actor

தெலுங்கு நடிகர் தனிஷ் அல்லாடி பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலாமானார். அவருக்கு அந்த நிகழ்ச்சி மூலம் எதிர்மறையான விமர்சனங்களும், கருத்துக்களுமே கிடைத்தன. இந்நிலையில், பார்வையற்ற மாணவி ஒருவருக்கு தனீஷ் உதவியது வைரலாகி வருகிறது.

கண்பார்வையற்ற மாணவி தேர்வு எழுத முடியாததால் உதவுமாறு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த தனீஷ், அந்த மாணவியை தொடர்புக் கொண்டு தான் உதவுவதாக தெரிவித்தார். அதன்படி அந்த மாணவிக்காக தேர்வெழுதியதுடன் பண உதவியும் அளித்து தனீஷ் உதவியுள்ளார்.

தனீஷ் செய்த இந்த செயல் அவர் மீதான எதிர்மறை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.