தீபாவளிக்காக ஏகத்வம் என்னும் புதுவகையான நகை வகைகளை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில், தனிஷ்க் இஸ்லாமிய குடும்பத்தில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போலவும், உங்களுக்கு இந்த பழக்கமெல்லாம் உண்டா என மருமகள் கேட்கும்போது, மகள்களை மகிழ்ச்சியாக வைக்கும் பண்பாடு அனைத்து குடும்பத்திலும் இருக்கிறதே என இஸ்லாமியரான அவரது மாமியார் தெரிவிப்பதுபோல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் ஒரு தரப்பினரும், வலதுசாரிகளும் இதை தொடர்ச்சியாக லவ் ஜிஹாத் என விமர்சித்து வெறுப்பை பரப்பி வந்த நிலையில், தற்போது அந்த விளம்பரத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கியிருக்கிறது தனிஷ்க் நிறுவனம்.


அன்பைப் பரப்பும் விதமாக தான் இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டதாக தனிஷ்க் விளக்கம் கொடுத்தும் இது இணையத்தில் விவாதமானது .