மதுரை:

ஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேசம் ஆக விதிப்படியே நடத்தப்படும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், தமிழகஅரசு பதில் தெரிவித்து செய்துள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோயிலில் வரும் பிப்ரவரி 5ந்தேதி கும்பாபிஷேசம்  நடைபெற உள்ளது.  இந்த நிலையில்,  தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை (கும்பாபிஷேகம்) தமிழில் நடத்தக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவில், “தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் ஆகம விதிப்படி ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. சைவ ஆகம விதிகளின்படி கட்டப்படும் கோயில்களில் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்.

பக்தி இலக்கியமான சைவத் திருமுறையில் தமிழ் மொழியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நடைபெற்றதற்கு சான்றுகள் உள்ளன. இதை கோயில் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆகம விதிகள் மீறப்பட்ட போது பெரிய கோயிலில் விபத்துகள் நடைபெற்றுள்ளது.

கடந்த 1997-ல் கோவில் குடமுழுக்கின் போது தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். அதே ஆண்டில் ஏர்வாடி மற்றும் கும்பகோணத்திலும் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பிப். 5-ம் தேதி நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நடைபெற உள்ள குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது.எனவே, குடமுழுக்கை  தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தினால் ஆகம விதிகள் மீறப்பட்ட போது நடைபெற்றது போல் விபத்துகள் நடக்கும் வாய்ப்பு ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலுக்கு  கடைசி குடமுழுக்கு எந்த மொழியில் நடத்தப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சமஸ்கிருதத்தில்தான்  குடமுழுக்கு நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

அதையடுத்து வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர், அப்போது தமிழில் அர்ச்சனை செய்ய பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றுஇம,   தற்போது சைவ அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி தமிழில் குடமுழுக்கு நடத்தலாம் என  தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அறநிலையத்துறை  வழக்கறிஞர், தஞ்சை பெரிய கோவிலுக்கு  ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடத்தப்படும் என கூறினார்.

இதையடுத்து, தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 27ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.