தஞ்சாவூர்:

ஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசனின் உருவசிலை, வர்ணம் பூசப்பட்டு பொலிவு பெற்று வருகிறது. இந்த சிலைக்கு நாளை மரியாதை செய்யப்படுகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் 5ந்தேதி குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ள நிலையில், ராஜ ராஜ சோழன் மணிமண்டபம் அருகில் அமைந்துள்ள  சிவாஜியின் திரு உருவசிலையும் சுத்தப்படுத்தப்பட்டு, மீண்டும் வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

சோழ பேரரசை ஆண்டு வந்த ராஜராஜ சோழனால், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் கட்டிடக்கலை உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில்  அமையப்பெற்றது. இந்த கோவிலுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதே வேளையில் ராஜராஜசோழன் புகழை உலகம் முழுவதும் பரப்பியதில் பெரும் பங்கு நடிகர் சிவாஜி கணேசனுக்கு உண்டு. 1973ம் ஆண்டு ராஜராஜ சோழன் என்ற பெயரில் உருவான தமிழ்ப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன், ராஜ ராஜ சோழனா நடித்து, உலகம் முழுவதும் ராஜராஜசோழன் வரலாற்றை பரவச் செய்து,  தமிழர்களுக்கும், சோழ பேரரசுக்கும் பெருமை சேர்த்தார்.

இதன் காரணமாக தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் மணிமண்டபம் சிவாஜியின் திரு உருவ சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் உளள  சிவாஜியின் திரு உருவ சிலை தூய்மை செய்து, வண்ணம் பூசப்பட்டு வரும் காட்சி

இந்த உருவச்சிலைக்கு நாளை (04.02.2020)  காலை 9.00 மணியளவில் சதா. வெங்கட்ராமன் தலைமையில் மூத்த சிவாஜி ரசிகர்கள் திரு. T. மாரிமுத்து, திரு. V.P.T.வெங்கிட்டு சாமி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு.கோ.அன்பரசன் உள்பட பலர்  கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு மாநகர சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவர் தஞ்சாவூர் கிஷோர் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் தகவல் அறிய 9360402702 என்ற எண்ணிற்கு தொடர்வு கொள்ளும்படியும் தெரிவித்து உள்ளார்.