கள்ள மார்க்கெட்டை எதிர்த்து சர்கார் படத்தை திரையிட மறுத்த திரையரங்கம்

ஞ்சாவூர்

ஞ்சாவூர் ராணி பாரடைஸ் திரையரங்கம் சர்கார் திரைப்படத்தை திரையிட் மறுத்துள்ளது.

பிரபல நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் போது கள்ள மார்கெட்டில் அதிக விலைக்கு டிக்கட் விற்பது வெகு காலமாக நடந்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இதற்கு திரையரங்க உரிமையாளர்களே துணை போவதாகவும் கூறப்படுகிறது. அதனால் பல ரசிகர்கள் பண நஷ்டம் அடைகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகிறது. வழக்கமாக ஆட்சியாளர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பற்றியும் சமூக அநீதிகள் குறித்தும் விஜய் தனது படங்களில் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார். இதனால் இப்படத்துக்கு மிகவும் வரவேற்பு உள்ளது.

கதை திருட்டு சர்ச்சை முடிந்து படம் வெளியாக உள்ள நேரத்தில் தஞ்சையில் இருந்து ஒரு புதிய சர்ச்சை தொடங்கி உள்ளது. இந்த திரைப்படம் தஞ்சையின் புகழ்பெற்ற திரையரங்கான ராணி பாரடைஸ் என்னும் வளாகத்தில் வெளியாக இருந்தது. தற்போது திரைப்படத்தை வெளியிட அந்த அரங்கம் மறுத்துள்ளது.

அந்த திரையரங்கம் டிவிட்டரில், “நாங்கள் முதல் இரு நாட்களுக்கு சர்கார் திரைப்படத்தின் அனைத்து டிக்கட்டுகளையும் கள்ள மார்க்கெட்டில் விற்க வேண்டும் என அப்படத்தின் வெளியீட்டாளர் கூறியதை ஏற்கவில்லை. அதனால் நாங்கள் சர்கார் படத்டை திரையிடப் போவதில்லை
நாங்கள் எப்போதும் நல்ல சினிமாவை நல்ல நெறிமுறையுடன் வழங்கவே விரும்புகிறோம். நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் அறிவுரை கூறுவதை தானும் பின்பற்ற வேண்டும்” என பதிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.