20,000 லிட்டர் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : டிரைவர் படுகாயம்

சென்னை :

சென்னை துறைமுகத்தில் இருந்து மடிப்பாக்கத்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு பாமாயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி இன்று மதியம் சுமார் 2:30 மணியளவில் அண்ணா மேம்பாலம் அருகே வரும்போது தலைகுப்புற கவிழ்ந்து.

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் படுகையாமடைந்தார், அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு வேகக்கட்டுப்பாடு தடைகள் இருந்த போதும், இந்த நிகழ்வு எப்படி ஏற்பட்டது என்பது விசாரணைக்கு பின்பே தெரியவரும்.

தீயணைப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் சாலையில் கொட்டி இருக்கும் எண்ணெயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.