புதையலை தேடி 20 அடி சுரங்கம் தோன்டிய மந்திரவாதியிடம் விசாரணை

த்ரா,  மேற்கு வங்கம்.

மேற்கு வங்கத்தில் புதையலை தேடி 20 அடி சுரங்கம் தோண்டிய மந்திரவாதியை பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் சத்ரா என்னும்சிற்றூர் உள்ளது.  இந்து ரோகித் நந்தி என்பவர் வசித்து வருகிறார்.    இவர் விவசாயத் தொழில் செய்து வருபவர் ஆவார்.  இவர் தனது மனைவி ஜெயந்தி என்பவருடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.   கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இவரை ஒரு மந்திரவாதியும், அவருடைய சீடரும் சந்தித்துள்ளனர்.

அவர்கள் ரோகித்தின் வீட்டில் பெரிய புதையல் ஒன்று இருப்பதை தங்கள் கனவில் கண்டதாகவும் அதை எடுக்க ரோகித் அனுமதி அளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.    கிடைக்கும் புதையலில் ரோகித்துக்கு பங்கு அளிப்பதாகவும் ஆசை காட்டி உள்ளனர்.    அவர்கள் தனது வீட்டில் இருந்து புதையலை தேடி எடுக்க   ரோகித்  ஒப்புக் கொண்டுள்ளார்.

மந்திரவாதியும் அவருடைய சீடரும் தினமும் வந்து அங்கு சுரங்கம் தோண்டி உள்ளனர்.  கிட்டத்தட்ட 20 அடி ஆழத்தில் நோண்டப்பட்டது.    அக்கம்பக்கம் உள்ளவர்கள் தினமும் இருவர் ரோகித் வீட்டுக்கு காலையில் வந்து மாலையில் செல்வதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் ஒரு நாள் ஒரு பெரிய துணையிடும் இயந்திரமும், கட்டைகளும் எடுத்து வந்துள்ளனர்.    இதனால் கிராம வாசிகள் சந்தேகம் அதிகரித்தது.    இதனால் ரோகித் தடுத்ததையும் மீறி உள்ளே சென்று அந்த சுரங்கத்தை கண்டு அதிர்ந்த கிராம வாசிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். .

காவல்துறையினர் வருவதற்குள் ரோகித் தப்பி ஓடி விட்டார்.   பிடிபட்ட மந்திரவாதி மற்றும் அவருடைய சீடரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.     புதையல் என பொய் கூறி வேறு ஏதும் நோக்கத்துடன் அவர்கள் சுரங்கம் தோண்டினார்களா என்னும் சந்தேகத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.