சத்தீஸ்கரில் பரபரப்பு: சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற மாந்ரீக பூஜை

த்திஸ்கர் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும்,  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர  மாந்ரீக பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்திஸ்கர் மாநில சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையும் நிலையில், வரும் நவம்பர் மாதம் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க மாநில பாஜக அரசு மாந்ரீக செயலில் ஈடுபட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சத்திஸ்கர் மாநில சட்டமன்ற அலுவலகம் முன்பு மந்திரவாதி – முதல்வர் ராமன்சிங் உடன் மந்திரவாதி ராம்லால்

நாடு முழுவதும் ஒருபுறம் விஞ்ஞான வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடியோ டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவேன் என்று  கூறி வருகிறார். ஆனால், அவரது கட்சியினரோ, மூட நம்பிக்கையையும்,  மாந்ரீக செயல்களும் தங்களை வெற்றி பெற வைக்கும் என்று நம்பி வருகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாகவே,   சத்திஸ்கர் மாநில பாஜக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், மாநில அரசின் சட்டமன்ற அலுவலகத்தில் மந்திரவாதியான சாமியார்  ஒருவரை கொண்டு மாந்ரீக பூஜை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறியுள்ள மாநில காங்கிரஸ் தலைவர், பிரகஷ்பதி சிங், சத்திஸ்கர் மாநில சட்டமன்ற சபாநாயகர் கவுரிசங்கர், அந்த மந்திரவாதியை சந்தித்து பேசியதாகவும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், இந்த மந்திரவாதியின் மாந்ரீக பூஜையில், மாநில முதல்வர் ராமன்சிங் கலந்துகொண்ட தாகவும், மந்திரவாதியின் உடல் முழுவதும் பல்வேறு உலோகத்திலான வடிவங்கள், மற்றும் முகங்கள் கொண்ட அணிகலன்கள் போட்டிருந்ததாகவும்  கூறப்படுகிறது.

பாஜக வெற்றிபெற பூஜைகள் செய்த மந்திரவாதியின் பெயர் ராம்லால் காஷ்யப் என்று கூறப்படு கிறது. அவர்,  பம்ஹார் சட்டமன்ற  தொகுதியில் உள்ள முல்முலா கிராமத்தில் குடியிருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மந்திரவாதியான ராம்லால், அவரது கிராமத்தின் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா மண்டலத்தின் தலைவராக இருந்து வருவதாகவும்,  ஹரி ஓம் ஜல்பான் கிரியை என்ற பெயரில் உணவகமும் நடத்தி வருகிறார்.

மாநில சபாநாயகர், முதல்வரை சந்தித்து குறித்து  தெரிவித்துள்ள  சாமியார் ராம்லால், ஆகஸ்டு 1ந் தேதி அமர்நாத் யாத்ராவுக்கு செல்ல இருப்பது குறித்து அவர்களிடம்  பேசியதாக தெரிவித்து உள்ளார்.