எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் தான்யா ரவிசந்திரன் ஒப்பந்தம்….!

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கவுள்ளார்.

நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில் தான்யா ரவிசந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 9) சென்னையில் தொடங்கியது.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்துமே எஸ்.ஆர்.பிரபாகரன் தான். இதில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ்ட் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் உள்ளிட்ட பலர் தான்யா ரவிசந்திரன் உடன் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக கணேஷ் சந்தானம், கலை இயக்குநராக மைக்கேல் ராஜ், எடிட்டராக டான் பாஸ்கோ ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.