இரண்டு இரத்தினக்கற்கள்… தொழிலாளிக்குக் கிடைத்த 25 கோடி.. 

இரண்டு இரத்தினக்கற்கள்… தொழிலாளிக்குக் கிடைத்த 25 கோடி..
தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர்.  இவர் இந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் பணிபுரியும் போது இரண்டு ‘டான்சனைட்’ எனப்படும் ரத்தினக் கற்களைக் கண்டுபிடித்துள்ளார்.
உலகளவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரத்தினக் கற்களிலேயே இவைதான் மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.  ஒரு கல்லின் எடை 9.27 கிலோவும், மற்றொரு கல்லின் எடை 5.8 கிலோவும் ஆகும். இந்த கற்களுக்கு அந்நாட்டு அரசு அவருக்கு தான்சானியன் பண மதிப்பில் 7.74 பில்லியன்  ஷில்லிங்ஸ் அளித்துள்ளது.  இது நமது இந்திய மதிப்பில் ரூபாய் 25 கோடிக்கும் மேல் வருமாம்.
இது குறித்து சுரங்க தொழிலாளி சானினியு லைசர், “இந்த பணத்தைக் கொண்டு பள்ளி ஒன்றையும், வணிக வளாகம் ஒன்றையும் கட்ட உள்ளேன்.  நான் படிக்காதவன் என்பதால் எனக்குப் பிறகு எனது குழந்தைகள் இதை முன்னெடுத்து நடத்த வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் இவர் கோடீசுவரர் ஆன சம்பவம், அந்நாட்டில் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
– லெட்சுமி பிரியா