காங்கிரசை விட்டு விலகிய தலைவர்கள் மீண்டும் சேர வேண்டும் : தாரிக் அன்வர்

பாட்னா

காங்கிரசில் இருந்து விலகிய தலைவர்களை மீண்டும் காங்கிரசில் இணைய வேண்டும் என தாரிக் அன்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பீகார் மாநிலம் கத்தியார் தொகுதியில் மக்களவை உறுப்பினர் தாரிக் அன்வர். இவர் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி சரத் பவாரின் தேசிய வாத காங்கிரசில் இணைந்தார். தேசிய வாத காங்கிராச் கட்சியின் தேசிய் பொதுச் செயலாளராகவும் பதவியில் இருந்தார். அந்த கட்சி சார்பில் தற்போது மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் அக்கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு ரபேல் விமான பேரம் குறித்து கருத்து மோதல் ஏற்பட்டது.

அதை ஒட்டி தாரிக் அன்வர் தேசியவாத காங்கிரசில் இருந்து விலக தீர்மானித்தார். சமரசம் பேச சரத் பவார் முன் வந்தும் தாரிக் அன்வர் அதற்கு உடன்படவில்லை. சென்ற வாரம் டில்லியில் தாரிக் அன்வர் தமது தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்தார். அதை ஒட்டி அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் தாரிக் அன்வர், “தேசிய வாத காங்கிரசை விட்டு விலகுவது எனக்கு மிகவும் துயரத்தை அளிக்கிறது. நான் எந்த நிபந்தனையும் இன்றி காங்கிரசில் இணைந்துள்ளேன். எனக்கு காங்கிரஸ் கட்சி பல பதவிகளை ஏற்கனவே அளித்துள்ளது. அதன் மூலம் நான் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். இப்போது மீண்டும் காங்கிரசில் இணைந்து சேவை செய்ய உள்ளேன்.

தற்போது பல காங்கிரஸ் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீண்டும் நமது தாய்க் கட்சியான காங்கிரசில் சேர அழைப்பு விடுக்கிறேன். நான் அனைவரும் ஒன்று சேர்ந்து மோடியை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். நான் எனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளேன்.” என தெரிவித்தார்.

You may have missed