அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..! முக்கிய உறுப்புகள் செயலிழப்பு

திஸ்புர்: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்டு, தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக கவுகாத்தி மருத்துவமனையில் தருண் கோகோய் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந் நிலையில் கோகோய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவக்குழுவின் மூத்த மருத்துவர் அபிஜத் சர்மா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

கோகோயின் உடல்நிலை தற்போது மிக மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது.  மருத்துவர்கள் இயன்றதை முயன்று வருகின்றனர் என்றார். கோகோயின் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்ததுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவா் சுயநினைவை இழந்தார் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா அண்மையில் கூறியிருந்தார்.