தஸ்லிமா நஸ்ரின் டிவிட் சர்ச்சை: சிஎஸ்கே வீரர் மொயின்அலியின் தந்தை அதிர்ச்சி…

சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் குறித்து பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், சர்ச்சைக்குரிய வகையில்  டிவிட் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பாண்டு ஐபில் போட்டியைத் தொடர்ந்து, சிஎஸ்கேவுக்கு இந்த ஆண்டு புதிய ஜெர்ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய நிறுவனங்களின்   பெயர்கள் இடம்பெற்றுள்ள. அதில் பிரபல மதுபான நிறுவனத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்தலோகோவை ஜெர்சியில் இருந்து நீக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் மொயின் அலி கோரிக்கை வைத்ததாகவும், அதை சென்னை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும்  தகவல் வெளியாகின.  ஆனால் இதனை சென்னை அணி நிர்வாகம் மறுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்காமலிருந்திருந்தால், அவர் ஐஸ்.ஐஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவிற்கு சென்றிருப்பார்” என டிவீட் பதிவிட்டார். இது பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
 இங்கிலாந்து அணியின்  சக  வீரர்கள் சாம் பில்லிங்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் மொயின் அலி குறித்த தஸ்லிமா நஷ்ரின்  பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும்,  சமூகவலைதளங்களிலும்,  மொயின் அலிக்கு ஆதரவாக ஏராளமானோர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த  தஸ்லிமா நஸ்ரின், “மொயின் அலி குறித்த தனது பதிவு மறைமுகமான கிண்டல் (SARCASAM) எனவும், இஸ்லாமிய சமூகத்தை மதச்சார்பற்றவர் களாக்க தான் முயல்வதாலும், இஸ்லாமிய வெறியை எதிர்ப்பதாலும் இதனை அவர்கள் ஒரு பிரச்சினையாக மாற்றி, என்னை அவமானப்படுத்த முயல்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம்  பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இகுறித்து வேதனை தெரிவித்த மொயின் அலியின் தந்தை, “எனது மகன் மொயினுக்கு எதிரான தஸ்லிமா நஸ்ரினின் மோசமான கருத்தைப் படித்ததில் எனக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அவரது விளக்கத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நிற்கிறேன் என்றும் கூறுகிறார். ஆனால், என்ன டிவீட்  செய்வாரோ அதுதான்  அடிப்படைவாதம், இது ஒரு தெளிவான இஸ்லாமிய வெறுப்பு பேச்சு,  சுயமரியாதை அற்ற, மற்றவர்களுக்கு மரியாதை தராதவர் தஸ்லிமா நஸ்ரின்,  அவர்மீது தான் கடும் கோபத்தில் உள்ளேன், அவரை  ஒருநாள் சந்திக்க நேர்ந்தால், உண்மையில் என்ன நினைக்கிறேன் என்று கூறுவேன் என கோபமாக  தெரிவித்துள்ளார்.