டாஸ்மாக்-கின் விபரீதம்: மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் 4மணி நேரம் போராட்டம் நடத்திய டாக்டர்

கோவை:

போதை ஆசாமி தாறுமாறாக வந்து டாக்டர் மனைவின் வாகனத்தின்மீது மோதியதில், பலத்த காயம் அடைந்த அநத பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலத்த காயத்துடன் அவரது மகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விசாரணையில் விபத்தில் இறந்தது, அந்த பகுதியை சேர்ந்த பிரபலமான மருத்துவர் என்பதும், விபத்து குறித்து அறிந்த மருத்துவர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,தனத மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்தினார். சுமார் 4 மணி நேரம் அவர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ். பொதுசேவையில் ஆர்வமுள்ள ரமேஷ் ஏராளமான சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் அவரது பெயர் பிரபலம். நேற்று அவரது  மனைவி ஷோபனா அந்த பகுதியில் 11வது வகுப்பு படித்து வரும் தனது மகளை கூப்பிட  இரு சக்கரவானத்தில் சென்றுள்ளார். வண்டியை ஷோபனோ ஓட்டி வந்துள்ளார்.

அப்போது,  கணுவாய் அடுத்த  ஜம்புகண்டிக்கு அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, எதிரே தாறுமாறாக வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் வேகமாக மோதியது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரது மகள் சாந்திதேவி உயிருக்குப் போராடினார்.

இதுகுறித்து  உடனடியாக ரமேஷூக்கு போலீசார் தகவல் சொன்னார்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ரமேஷ்  கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ் கதறிய ரமேஷ்,  உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.  மனைவி ஷோபனாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத ரமேஷ், மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து, போராட்டம் நடத்த தொடங்கினார். அப்போது, டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேசமாக குரல் எழுப்பினார்.

மருத்துவருக்கு ஆதரவாக பொதுமக்களும் திரள,  நடுரோட்டில் மனைவியின் சடலத்துடன்   டாக்டர் போராட்டம் நடத்திய தகவல் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்த வந்து, டாக்டர் ரமேஷை சமாதானப்படுத்தினர்.மேலும்,  டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விபத்தை ஏற்படுத்திய வருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து டாக்டர் ரமேஷ் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தவிபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், மருத்துவர் மனைவி ஷோபனாவின் பைக் மீது மோதியவர்  பாலாஜி என்பதும், அவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஃபுல் மப்பு ஏற்றிக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்தது.

1 thought on “டாஸ்மாக்-கின் விபரீதம்: மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் 4மணி நேரம் போராட்டம் நடத்திய டாக்டர்

  1. இப்போது தமிழகத்தில் மிக முக்கியமான வேலை; மதுவை தடை செய்வதுதான் , இதுவே மக்களின் மிக முக்கிய வேண்டுகோள் ! முதலில் இதை செய்யுங்கள் please ! குடியினால் சீரழியும் குடும்பங்களுக்கு ஒரு நன்மை உண்டாகட்டுமே இதை குறித்து சட்ட சபையில் பேசி முடிவு எடுக்கலாம் ! 

Leave a Reply

Your email address will not be published.