தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்: உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பல தளர்வுகளையும் அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், பார்கள் திறக்கப்படவில்லை.

ஊரடங்கின் போது பார்கள் தடை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. ஆகையால், பார்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில், வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க, பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் தற்போது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டு வருகிறது.