சென்னை:

சிஎஸ்கே அணி ஸ்பான்சர் மற்றும் டாஸ்மாக் மதுபானம் தயாரிப்பு நிறுவனமான  எஸ்.என்.ஜே. குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையல் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  வருமானவரித்துறை தெமதெரிவித்து உள்ளது.

முன்னாள் லாட்டரி வியாபாரியும், டாஸ்மாக் மதுபான ஆலை நிறுவனதும், படத்தயாரிப்பாள ருமான எஸ்.என். ஜெயமுருகன் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

சென்னை அருகே காஞ்சிபுரத்தில்  எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் என்ற பெயரில் மதுபான ஆலை உள்ளது. இதன் தலைமை அலுவலகம், சென்னை தியாகராயர் நகரில் உள்ளது. இந்த அலுவலகம் உட்பட தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகம் என மொத்தம்  40-க்கும் மேற்பட்ட இடங்களில் 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் இதுவரை 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மது விற்பனை தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் மது தேவையில் 15 சதவீதத்தை நிறைவேற்றி வரும் இந்த நிறுவனம் பல்வேறு வெளிமாநிலங்களிலும் உயர் ரக மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. லாட்டரி, சினிமா, என பல தொழில்களையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராகவும் உள்ளது.

ஜெயமுருகன் நிறுவனத்துக்கு கடந்த 2008ல் திமுக ஆட்சியில் மதுபானம் தயாரிப்பு ஆலைக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதையடுத்து,  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் படங்களை தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.