சென்னை,
மிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 6700 டாஸ்மாக் மது விற்பனை கடைகள் உள்ளது. மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் 500 கடைகளை குறைத்து உத்தரவிட்டார். தற்போது தமிழகம் முழுவதும் 6200 மதுக்கடைகள் மது விற்பனையை செய்து வருகிறது.
taxmac1
சாதாரணமாக ஒரு நாளில் விற்பனை செய்யப்படும் மதுவானது குறைந்த பட்சம் 60 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். விசேஷ நாட்களில் மதுவின் விற்பனை 100 கோடிக்குமேல் தாண்டும்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இன்னும் அமோகமாக இருக்கும்.
கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி 2 நாட்களில் 215 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.  ஆனால், இந்த ஆண்டு மது விற்பனையானது கடந்த ஆண்டைவிட அமோகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் 108 கோடி ரூபாய்க்கும், தீபாவளியன்று 135 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.
taxmac
2 நாட்களிலும் சேர்த்து மொத்தம் 243 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் 243கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை: கடந்தாண்டை விட 28 கோடி ரூபாய் கூடுதல் விற்பனை  செய்து சாதனை படைத்துள்ளது.
இதிலிருந்து தமிழ்நாட்டில் மது கடைகள் குறைத்தாலும்,  மது குடிப்போரின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது….