டாஸ்மாக் பணியாளர்கள் நாளை 2மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் பணியாளர்கள், நாளை 2 மணி நேரம் வேலைநிறுத்தம் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர். அதன்படி நாளை (25ஆம் தேதி)  காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் நடைபெறும், என்று அறிவித்து உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக   கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது புதிய முடிவை அறிவித்து உள்ளனர்.