ஆயிரம் கடைகளில்  சரக்குகளை காலி செய்த ’டாஸ்மாக்’

ஆயிரம் கடைகளில்  சரக்குகளை காலி செய்த ’டாஸ்மாக்’


ஊரடங்கு காரணமாக-செல்போன் திருட்டு, வழிப்பறி போன்ற சில்லறை குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் காலரை தூக்கி விட்டிருந்த நேரத்தில்-

‘ டாஸ்மாக் ‘ கடைகள் ஆங்காங்கே உடைக்கப்படலாயின.

மதுப்பாட்டில்கள் கொள்ளை போயின.

இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 50 லட்சம் ரூபாய் புதுப்பாட்டில்களைக் குடிமக்கள்  எடுத்துச்சென்று, ஓசியில் குடித்துள்ளனர்.

ரொம்ப லேட்டாக விழித்துக்கொண்ட ‘டாஸ்மாக்’ நிர்வாகம் பாதுகாப்பு இல்லாத கடைகளில் இருந்து பாட்டில்களை, அருகே உள்ள குடோன்களுக்கு எடுத்து செல்ல முடிவு செய்தது.

இதுவரை ஆயிரம் கடைகளில் இருந்து  மது பாட்டில்கள் காலி செய்யப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு – 100 கோடி ரூபாய்.

போகிற போக்கில் உங்களுக்கு ஒரு புள்ளி விவரம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 300 ;டாஸ்மாக்’’ கடைகள் உள்ளன.

சராசரியாக தினமும் 70 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனையாகிறது.

கடைசியாகக் கடைகள் அடைக்கப்படுவதற்கு முதல் நாள் மட்டும், 200 கோடி ரூபாய்க்கு

மதுப்பாட்டில்கள் விற்பனையாகி –

சாராய ’வரலாற்றில்’’ சரித்திரம் படைத்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்