மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த மேல்முறையீடு மனு, தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க சண்டிகருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினர். அதே போல தமிழகத்துக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்யவும், மொத்த டாஸ்மாக் கடைகளின் விபரங்கள் குறித்து தாக்கல் செய்யுமாறும் வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தினர்.