சென்னை,

ரும் புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனைக்கு இலக்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இன்னும் சில நாளில் 2018ம் ஆண்டு பிறக்க உள்ளது. இதன் காரணமாக தற்போதே ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தும் களைகட்டி வருகின்றன.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராக உள்ள நிலையில், குடிகாரர்கள் டாஸ்மாக்கோடு புத்தாண்டை வரவேற்க காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 200 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய, ‘டாஸ்மாக்’ முடிவு செய்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் டாஸ்மாக் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புத்தாண்டில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக, அதற்கு தேவையான மது வகைகள் ஸ்டாக் வைத்திருக்கும்படி அனைத்து கடைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில்,  புத்தாண்டை காரணம் காட்டி,  மது விலையை உயர்த்தி விற்போர் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.