திருப்பூர்,

திருப்பூர் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராடி வந்தனர்.

ஆனால், பொதுமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி தூள் தூளாக்கினர்.

திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொது மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலை டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொது மக்கள் பொங்கியெழுந்தனர். ஆவேசமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து கடையையும், மது பாட்டில்களையும் அடித்து அடித்து நொறுக்கினர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புக்கு பணியில் ஒருசில போலீசார் மட்டுமே இருந்ததால், அவர்களால் பொதுமக்களின் ஆவேச தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.