சென்னை:

கஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தையொட்டி, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக குடிமகன்கள் சோகம் அடைந்துள்ளனர்

ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் விதிகள்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சென்னை  மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி  அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மதுபானம் விதிகள்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக்), பார்கள், கிளப்புகள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விதிமுறை களின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னையில் சுமார் 300 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், அதை மூட மாவட்ட நிர்வாகம்  உத்தரவிட்டுள்ள நிலையில்,  சுதந்திரத்தினத்தன்று கூட  சுதந்திரமாக குடக்கக்கூடாதா என்று குடி மகன்கள் அங்கலாய்த்து உள்ளனர்.