முழு ஊரடங்கு அறிவிப்பு: 4 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…

--

சென்னை:

கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால், ஏற்கனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகளில் ஜூன் 19 முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு இன்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.