கணினி மயமாகும் டாஸ்மாக் கடைகள்… டெண்டர் வெளியீடு

--

சென்னை:

மிழகம்  முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், கணினிமயமாக்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் நடைபெறும் மது விற்பனை மற்றும் கொள்முதல் குறித்த தகவ்லகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் தமிழகஅரசு ஈடுபட்டு உள்ளது.  ஏற்கனவே கள்ள மார்க்கெட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் எழுந்து, அது தொடர்பான வழக்கும் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை கம்ப்யூட்டர் மயமாக்கி, மதுபானங்களின் இருப்பு மற்றும் விற்பனை போன்றவற்றை மின்னணு மயமாக்கி தினசரி ரிப்போர்ட் செய்யும் வகையில், டிஜிட்டல் மயமாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் அலுவலகங்களை சர்வர் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.