மதுப்பிரியர்களுக்கு நற்செய்தி – சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறப்பு

சென்னை

கஸ்ட் 18 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறக்கப்பட உள்ளன.

கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன.

அதன் பிறகு ஊரடங்கு விதிகளில் தளர்வு செய்யப்பட்ட போது சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

இதனால் மதுப்பிரியர்கள் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கி வந்தனர்.

இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் ஆகஸ்ட் 18 முதல் திறக்கப்படும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

தினமும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

தினமும் ஒரு கடைக்கு 500 டோக்கன்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் முகக் கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.