சென்னை, திருவள்ளூரில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது…

சென்னை:

மிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து நாளை முதல் மீண்டும் மது கிடைக்கும் என்ற ஆசையில் குடி மகன்கள் துள்ளிக்குதித்து, கடை திறப்பை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ள சென்னை மற்றும் திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் திருவள்ளூரில் கடைகள் திறக்கப்படாது,  மேலும் மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகளும் திறக்கப்படாது,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

அத்துடன்  ஒருநாளைக்கு 500 பேருக்கு மட்டுமோ டோக்கன் கொடுத்து, மது வழங்க வேண்டும் என்றும், மது வாங்க வருவோர் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகஅரசின் அறிவிப்பால்  2 மாவட்ட குடிமகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.