ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… தமிழகஅரசு

சென்னை:
மிழகத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால்,  ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழகஅரசு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்டு மாதம் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் என்றும் அறிவித்துள்ளது.  அதற்கான வழிகாட்டு நெறிமுறை களைளுடன் சில தளர்வுகளை கொடுத்த தமிழக அரசு,  கடந்த ஊரடங்கை போல கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்,  ஆகஸ்ட் மாதத்தில்  வரும் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில்  டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.