மே 7 முதல் மதுக்கடைகள் திறப்பு: தமிழக அரசு உத்தரவு, விதிமுறைகளும் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல்  அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இப்போது மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக , ஆந்திர மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வரும் 7ம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும். ஒரு நபருக்கு, ஒரு நபர் இடைவெளியை பின்பற்றி மதுவை வாங்க வேண்டும். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

1 thought on “மே 7 முதல் மதுக்கடைகள் திறப்பு: தமிழக அரசு உத்தரவு, விதிமுறைகளும் அறிவிப்பு

  1. குடிகாரர்களே உங்களுக்கு கொண்டாட்டம் உங்கள் வீட்டிலோ திண்டாட்டம் . கர்நாடகா , ஆந்திரா திறந்தாச்சி நாங்க மட்டும்???

Comments are closed.