மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் டாஸ்மாக் மதுக்கடை: இப்படி ஓரு கோரிக்கை

மாவட்ட ஆட்சியல் அலுவலகங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து செல்லப்பாணியன்,  “தருமபுரியில் போலி மதுபானம் குடித்து மரணமடைந்தவர்களின். குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக.  ஐந்து லட்சம் நிவாரணம். வழங்க வேண்டும். .மதுவிலிருந்து மீள நினைப்பவர்களுக்கு. குடி மீட்பு மையங்கள் . அனைத்து. தொகுதிகளிலும்  திறந்திட வேண்டு்ம் “ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுக்கடைகளை துவக்கும்போது மக்களின் எதிர்ப்பை சமாளிக்க . மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.  குடுமகன்களின் வசதிக்காக டாஸ்மாக் மதுக்கடைகளை துவக்க வேண்டும் என்ற மாநில அரசின் கொள்கையை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர்களும், வட்டாட்சியர்களும் படும்பாடு சொல்லி மாளாது.

இந்த பிரச்சினையைப் போக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம். இது ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் அலுவலகங்கள் என்பதால் இங்கு செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் கலப்படம் இருக்காது.  சமீபத்தில் கூட தர்மபுரியில் போலி மதுபாணம் குடித்து சிலர் பலியாகி இருக்கிறார்கள். ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் இதுபோன்ற அப்பாவிகள் பலியாவதை தடுக்க முடியும்.

மேலும்,  மதுபான ஆலைகளில் சில்லரை விற்பனையை தொடங்க வேண்டும்” என்று செல்லபாண்டியன் கேரிக்கை வைத்துள்ளார்.