பாஜக ஆளும் கர்நாடகாவில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி மேயர் ஆன முஸ்லிம் பெண்!

--

மைசூரு:

பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில்,  பாஜக வேட்பாளரை வீழ்த்தி மைசூரு மாநகராட்சி மேயராக  முஸ்லிம் பெண் தஸ்னிம் (Tasneem)  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர், மைசூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

‘மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் களமிறக்கப்பட்ட  தஸ்னிம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கீதாஸ்ரீ யோகானந்த்-ஐ விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மைசூரு மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சிக்கு போதிய கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்று மேயர் ஆகிவிடலாம் என்று பாஜக கனவு கண்டது. அதற்கான முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், சமீபத்திய சிஏஏ சட்டத்தினால், பெரும்பாலான மக்களிடம் பாஜக ஆட்சி மீது அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில், மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கீதாஸ்ரீக்கு வெறும் 23 பேர் மட்டுமே ஆதரவு அளித்த நிலையில், தஸ்னிமுக்க 47 வாக்குகள் கிடைத்து. இதனால் அவர்  மைசூரு மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மைசூரு மாநகராட்சியின் 33வது மேயர்.

மைசூரு மாநகராட்சியின், இளம் வயது மேயராகவும், முதன் பெண் மேயகராகவும் தஸ்னிம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஶ்ரீதர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

மைசூரு மாநகராட்சியின் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 64. இதுதவிர, எம்.எல்.ஏ, எம்.எல்.சி, எம்.பி-க்கள் வாக்குகளையும் சேர்த்தால் மொத்தம் 74 வருகிறது. இதில் பா.ஜ.க-வுக்கு 21 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 18, காங்கிரஸ் கட்சிக்கு 19 உறுப்பினர்களும் உள்ளனர்.

கடந்த ஆண்டு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி முதல் முறை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தஸ்னிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட தஸ்னிமுக்குக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.