சுவையான மணத்தக்காளி குழம்பு…

 

தேவையான பொருட்கள் :  

காயவைத்த மணத்தக்காளி வற்றல் – 25 கிராம்

காய்ந்த மிளகாய் – 2

பூண்டு – 4 பல்

தக்காளி – 1

மஞ்சள் தூள் – தேவையான அளவு

புளி – ஒரு எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்

வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு –  கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் –  4 டீஸ்பூன்

உப்பு – சிறிதளவு

கொத்தமல்லி

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள  வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு பூண்டு, தக்காளி கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதனுடன் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக மீண்டும் வதக்கவும்..

பிறகு  சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும்.  இதனுடன்  கரைத்துவைத்த புளிக்கரைசலை கலந்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்தவுடன் குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கானதும் கொத்தமல்லி  தூவி இறக்கவும். இப்போது சுவையான மணத்தக்காளி வத்தக்குழம்பு ரொடி.!

குறிப்பு;. மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் தன்மைகொண்டது.

கார்ட்டூன் கேலரி