கேரளா: வெள்ளத்தால் பாதித்த கார்களுக்கு இலவச சேவை….டாடா அறிவிப்பு

டில்லி:
கடந்த 8ம் தேதி முதல் கேரளாவில் கடும் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. 37 அணைகளில் 35 அணைகள் நிரம்பிவிட்டன. இதனால் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவில் சிக்கி கேரளா மக்கள் தவித்து வருகின்றனர். 324 பேர் பலியாகியுள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட் டுள்ளது என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. 60 ஆயிரம் பேர் குடியிருப்புகளை இழந்து முகாம்களின் தஞ்சமடைந்துள்ளனர்.

கேரளா வெள்ள நீரில் மூழ்கி பல கார்கள் பழுதடைந்துள்ளது. இவற்றை சீர் செய்து கொடுக்க ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், வோல்க்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தற்போது டாடா நிறுவனமும் முன்வந்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்த அனைத்து டாடா நிறுவன கார்களை இலவசமாக பணிமனைக்கு கொண்டு செல்ல உதவப்படும் என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு அறிவித்துள்ளது. இதற்கான புகார்களை வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கலாம்.

அதோடு டாடா மோட்டார்ஸ் நிறுவன இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால் அருகில் உள்ள பணிமனைக்கு தங்களது வாகனங்களை கொண்டு செல்ல உதவி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சகஜ நிலை திரும்பு வரை இது செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.