டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் புதிய நாடாளுமன்ற வளாகம், ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஓப்பந்தப்புள்ளி கோரப்ப​ட்டது. அதற்கான திட்டச் செலவாக ரூ.940 கோடி வரை மத்திய பொதுப் பணித்துறை நிர்ணயித்துள்ளது.

டாடா, எல்&டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் நாடாளுமன்ற கட்டுமான ஒப்பந்தத்தில் பங்கேற்றன. இந் நிலையில் மிகக் குறைவாக ரூ. 861.90 கோடிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய டாடா நிறுவனத்துக்கு, இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

எல்&டி நிறுவனம் ரூ. 865 கோடி கோரியிருந்தது. 21 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினம் 2022ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. 900 முதல் 1200 எம்.பி.க்கள் அமரும் வகையில் நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.